உள்நாட்டு படகு சேவைகள் தொடர்பில் புதிய சட்டத்திட்டங்கள்!

இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டு படகு சேவைகள் தொடர்பில் புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 24 மீற்றர்களுக்கு குறைவானதும், 5 மீற்றர் அல்லது அதற்கு அதிகமானதுமான நீளத்தைக் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு படகுகள், 100க்கும் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் 20 பயணிகளுக்கான இரவு நேர தங்குதல் வசதியைக் கொண்ட படகுகள் என்பன இந்த சட்டங்களுக்கு உட்படவுள்ளன. குறித்த சட்டத்தின் அடிப்படையிலேயே புதிய வர்த்தக படகு சேவைகளும் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஜீன் 6ஆம் திகதி நியமனம்!
புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி நிறைவடைந்துள்ளது பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!
எரியும் நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு!
|
|