உயர்நீதிமன்றம் செல்கிறார் கீதா!

தனக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீரா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை நேசிக்கும் ஆதரவாளர்கள் குழப்பமடைய வேண்டாம் என தெரியப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், நியாயத்தை எதிர்பார்த்து செயற்பட இன்னும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யவுள்ள நிலையில், அதன் தீர்ப்பு கிடைக்கும் வரை தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்
Related posts:
பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டு: பிடிபட்ட ஒருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
ரேணுகா ஹேரத் காலமானார்!
சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!
|
|