உடுவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!

Tuesday, July 26th, 2016

கடந்த 24ஆம் திகதி உடுவில் மேற்குப் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை நேற்று (25) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராற்றில் ஈடுபட்டு இளைஞன் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் எஸ்.தினேசன் (வயது 18) என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார், 4 சந்தேகநபர்களை நேற்றையதினம் கைதுசெய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாள் ஒன்றை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: