உக்ரைன் பிரஜையின் மரண தண்டனை உறுதி !

Friday, December 9th, 2016

நாவல – கல்பொத்த பகுதியில் பெண்ணொருவர் மற்றும் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட உக்ரேன் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, மற்றைய நபரான உக்ரைக் யுவதியை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு இடம்பெற்ற குறித்த கொலை தொடர்பான வழக்கில், உக்ரைன் பிரஜைகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக பிரதிவாதிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இந்தநிலையிலேயே குற்றவாளியாக கருதப்பட்ட உக்ரைக் யுவதியை விடுதலை செய்யுமாறும், மற்றைய நபரது தண்டனையை உறுதி செய்வதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

1497567723Untitled-1

Related posts: