இலங்கை – அஸி  தொடரின் போது உள்ளக கிரிக்கெட் மையம் திறக்கப்படும்!

Friday, August 5th, 2016

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய – இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

உள்ளக கிரிக்கெட் மையம் இலங்கை கிரிக்கெட் சபையின் மேற்பார்வையின் கீழ் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்தின் பராமரிப்பில் விடப்படவுள்ளது. முன்னதாக குறித்த உள்ளக கிக்கெட் மையம் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட இருந்த போதிலும் பின்னர் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. நவீன தொழிநுட்பங்கள், நிலவிரிப்புக்கள், பயிற்சி வலைகள் மற்றும் கமராக்கள் ஆகியற்றை பயன்படுத்தி இந்த உள்ளக கிரிக்கெட் மையம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: