இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி – சீனக் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் இலங்கையின் மீன்பிடி அமைச்சுக்கும் இடையே நெறிமுறை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிப்பு!
Wednesday, January 4th, 2023இலங்கையில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் மீன்பிடி நீர்வாழ் பொருட்களின் ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் கால்நடை சுகாதாரத் தேவைகள் தொடர்பான நெறிமுறையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீனக் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சுக்கும் இடையில் இந்த நெறிமுறை கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கையின் 33 உணவுப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனக் குடியரசின் சுங்கப் பொது நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 29 நீர்வாழ் பொருட்கள் மற்றும் சீனக் குடியரசில் பதிவுசெய்யப்பட்ட 38 இலங்கை நிறுவனங்கள் இந்தப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களாகப் பணியாற்றி வருகின்றன.
இதன்படி, சீனாவிற்கு நீர்வாழ் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவதற்காக நெறிமுறையில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|