இலங்கைக்கு சீனா இராணுவ தளபாடங்களை வழங்கவுள்ளது!

Tuesday, October 18th, 2016

இலங்கைக்கு சீனா, 120 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ தளபாடங்களை வழங்கவுள்ளதாகவும் அண்மையில் சீனாவில் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி உள்ளிட்ட உயர்தரப்படையதிகாரிகள் பங்கேற்றனர். இதன்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. கூட்டு இராணுவப்பயிற்சி, போரியல் நிபுணர்களின் பரிமாற்றம், பயிற்சி நடவடிக்கைகள், மற்றும் கடல்பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு வழங்கல் உட்பட்ட பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

104786648china-sri-lanka

Related posts: