இனம்தெரியாத காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, November 20th, 2017

ஒரு வித காய்ச்சல் காரணமாக நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி பகுதியினைச் சேர்நத சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி (வயது ௲ 55) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

கடந்த 16 ஆம் திகதியில் இருந்து வாந்தியுடன் கூடிய காய்ச்சல் காரணமாக இவர் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து 18 ஆம் திகதி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சையினை பெற்ற குறித்த பெண் வைத்தியசாலையில் வழங்கிய மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார்.

காய்ச்சல் கூடிய நிலையில் பிள்ளைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்திருந்தனர். எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.

இறப்பு விசாரணையை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: