இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்கள்!

Tuesday, January 17th, 2017

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்களின் புதிய பிரிவு எதிர்வரும்-21 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06.30 மணிக்கு நல்லூர் ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை-06.30 மணி முதல் 07.30 மணி வரை ஆண்கள் பிரிவிற்கும், காலை-07.30 மணி முதல் காலை-08.30 மணி வரை பெண்கள் பிரிவிற்கும் தனித்தனியே இலவசமாக இந்த வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளன.அத்துடன் நோயாளர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளன.

சுமார் மூன்று மாத காலப் பயிற்சி நெறியைக் கொண்ட இந்தக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்பவர்களுக்குப் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 welcompage_01

Related posts: