இதுவரை 25% நெல் கொள்வனவு – பங்குனியில் மேலும் அதிகரிக்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: