இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி!
Tuesday, August 15th, 2017யாழில். இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த பற்றிக் நிரஞ்சன் (வயது 28) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த வேளையி;ல் நேற்று இரவு குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்க நண்பர்களுடன் சென்ற வேளையில், இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவருடன் கூடச் சென்றவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்!
நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்துக்கு!
|
|