அரசாங்கம் அரசியல் அமைப்பு தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

Thursday, June 2nd, 2016

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் மட்டுமே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. எனினும் தற்போது அதனை கவனிக்காமல் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவருகிறது. இதன்காரணமாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், மற்றும் நீதியைக்கோரி நிற்பவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இராணுவத்தினர் பிடித்துவைத்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகள் விடுவிக்கப்படும் தினத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.

அண்மையில் தமது குழுவினர், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு சென்றபோது பலர் இன்னும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்துவருவதை காணமுடிந்ததாகவும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது

Related posts: