அமைச்சர் மங்கள இந்தியா பயணம்!

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஞாயிற்றுக் கிழமை இந்தியா செல்கின்றார். மும்பையில் நடைப்பெறவுள்ள இருநாள் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காகவே வெளிவிவகார அமைச்சர் இந்தியா செல்கின்றார்.
புது டில்லியில் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடைப்பெறவுள்ள இந்த கருத்தரங்கில் வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நேபாள பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான கமல் தாபா ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
” இந்தியாவின் நுழைவாயில்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்படவுள்ள இந்தக் கருத்தரங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சும், கேட்வே இல்லமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன. இந்த கருத்தரங்கில் கலந்துக் கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் வெளிவிவகார கொள்கை தொடர்பிலும் சர்வதேச நாடுகளுடனான புதிய நம்பகமான அணுகுமுறைகள் தொடர்பாகவும் உரை நிகழ்த்த உள்ளார்.
Related posts:
|
|