அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதற்கு மக்கள் ஆதரவு அவசியம் – வி.கே.ஜெகன்.

Monday, April 10th, 2017

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைவாக வட்டார செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் அந்தந்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளையும் திறம்பட முன்கொண்டு செல்ல முடியும் என ஈழ.மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவகம் எழுவைதீவிற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட நிர்வாகச்செயலாளர் அங்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போது எழுவைதீவிற்கான இறங்குதுறை பிரதானவீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த நிலையில் இப்பகுதி மக்கள் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இப் பிரதான பாதையின் புனரமைப்பின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தியிருந்ததுடன் அதனை புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

 

அதனடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக வீதி புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவானதாக இருக்கிறது. இப் பாதை புனரமைப்பு மட்டுமல்லாது இப் பகுதியின் பல்வேறுபட்ட உட்கட்டுமான மற்றும் ஏனைய அபிவிருத்திகளை கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்திருந்தோம்.இவற்றிற்கு நாம் அப்போது அரசுடன் கொண்டிருந்த இணக்க அரசியல் பெரும் பலமாக இருந்தது.

இது போன்று இன்னும் இப்பகுதியின் அபிவிருத்திகள் பல முன்னெடுக்க வேண்டியதாகவே உள்ளது. எனவே அபிவிருத்தியை மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்தப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் எமது கட்சி சார்ந்தவர்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். இவற்றை முன்கொண்டு செல்வதற்கு மக்கள் தமது ஒன்றிணைந்த ஆதரவை எமக்கு வழங்கும் பட்சத்தில் நிற்சயம் மக்களின் கோரிக்கைகள் உட்பட அபிவிருத்திகளையும் எம்மால் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பின் போது கட்சியின் ஊர்காவற்துறை பிரதேச நிர்வாகச் செயலாளர் மருதயினார் காந்தன் உடனிருந்தார்.

Related posts: