அதிபர்,ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்:அதிர்ப்தியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
Saturday, September 3rd, 2016
நாட்டின் பல பிரதேசங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான முறையில் இடமாற்றம் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் சில அதிகாரிகள், சில மாகாண கல்வி அதிகாரிகள், சில வலய கல்வி அதிகாரிகள் போன்றவர்களினால் அவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளின் நிமித்தம் இவை இடம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியல் அழுத்தங்கள் இன்றி சுமார் 4000 அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். கல்வி நிர்வாக சேவைக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

Related posts:
சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில்...
தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டாம் - குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் குறித்து பெற்றோருக்கு அவ...
5000 பரதக் கலைஞர்கள் - காலிமுகத்திடலில் நடந்த உலக சாதனை!
|
|
|


