அதிக இலாபம் ஈட்டிய கிரிக்கெட் போட்டி!

அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால –
அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக கிடைத்த அதி கூடிய வருமானம் இதுவென்றும், பல்லேகலையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை விட அதிகளவானோர் குறித்த போட்டியை பார்வையிட வருகைத் தந்திருந்தனர். இந்நிலையில் கிரிக்கெற் போட்டியால் அதிக இலாபங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|