வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சு!

Thursday, March 2nd, 2017

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்களுக்கு பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக்கூறியுள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, கடந்த-2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெலைபேசியில் தொடர்புகொண்டு ஆராய்ந்தறிந்தபின்னர் குறித்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

இதன்போது உயர்கல்வி அமைச்சர், குறித்த போராட்டம் நடைபெறுவது தொடர்பாக தமக்கு இதுவரை எதுவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்ததுடன்  குறித்த பட்டதாரிகளது போராட்டம் தொடர்பில் உடனடியாக தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தபின்னர் கருத்து  தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த தகவலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  போராட்டத்திலீடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது போராட்டம் உயர்  கல்வி அமைச்சரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள்  இதனூடாக தமது போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

004 copy

Related posts:

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
இன நல்லிணக்கத்தை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் - வவுனியாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப...
முல்லைத்தீவில் ஈ.பி.டி.பி. யின் மாவட்ட விஷேட மாநாடு: பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்...

மயிலிட்டி குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ...
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு...