வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு – பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021

வெல்லமன்கட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள் மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்டிருந்தார்.

வெல்லமன்கடவில் மீன்பிடித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்ட நிலையில்,  அமைச்சரின் விஜயத்தில் இணைந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, குறித்த மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தியமைக்காக பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

இதேவேளை வடகடல் நிறுவனத்தின் லுணுகல வலை உற்பத்தித் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழிற்சாலை செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் பணியாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

உற்பத்தி செய்யப்படுகின்ற வலைகள் அனைத்தும் நீண்ட காலப் பாவனையை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: