விதியை மதியால் வெல்லமுடியும் – தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, July 2nd, 2020

தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் அனைத்தவிதமான பிரசினைகளுக்கும் முழுமையான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க சந்தர்ப்பம் இன்று ஒவ்வொருவரது கைகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் தமது எதிர்காலம் கருதியதாக சிந்தித்து  தீர்மானங்களை எடுப்பார்களாயின் அனைவரது வாழ்வியலையும் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகைளயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில் –

நடைமுறைச் சாதத்தியமான விடயங்களையும் தீர்வுகளை காணக்கூடியதான பொறிமுறையையும் கொண்டுள்ள நாம் இன்றுவரை தமிழ் மக்களது அரசியல் பலத்தை அதிகளவாக பெறமுடியாததன் காரணமாகவே தமிழ் மக்க்ள எதிர்கொள்ளும்; அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை காணமுடியாது இருந்துவந்திருந்திருக்கின்றோம்.

ஆனாலும் சிறிய அரசியல் பலத்தினூடாக கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தேவையான அதிகளவான பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வுகளையுளும் கண்டு கொடுத்துள்ளோம்.

தற்போது தமிழ் மக்களிடம் தமது அனைத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் எமது கரங்களுக்கு தருவார்களானால் நிச்சயம் முடியுமான தீர்வுகளை கண்டுதர எம்மால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது விதியை மாற்ற முடியாது என்ற கருத்தை மாற்றியமைக்கும் பொறுப்பு தமிழ் மக்களிடமே இருக்கின்றது அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவார்களேயானால் அந்த விதியை எம்மால் மாற்றிமைக்க முடியும்; என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: