வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – புங்குடுதீவு மக்கள் தெரிவிப்பு!

Sunday, February 4th, 2018

தீவக மக்களாகிய நாம் காலத்திற்குக் காலம் குடிநீர் பிரச்சினையோடு வாழ்ந்துவந்த நிலையில் எமது குடிநீர்ப் பிரச்சினையை ஓரளவேனும் தீர்த்துவைத்து எமது இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துத் தந்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என புங்குடுதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் குறிப்பிடுகையில் –

தீவக மக்களாகிய நாம் ஒருகாலம் எமது வாழ்வின் இருப்புக் குறித்து கேள்விக்குறியுடனேயே வாழ்ந்து வந்தோம். அந்த நிலையில்தான் எமக்கு உணவழித்து வழிகாட்டி எம்மை இற்றைவரை பாதுகாத்து எமது பாதுகாவலனாக மடுமன்றி எமது வாழ்வின் வழிகாட்டியாகவும் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார். அந்தவகையில் இங்கு எமது வாழ்வின் மாற்றத்திற்கு வேறு யாரும் உரிமை கோரமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா மக்களாகிய உங்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே எனது விருப்பாகும். அந்தவகையில்  நீங்கள் இந்த பிரதேச சபையை நீங்களே வெற்றெடுத்து  உங்கள் தேவைகளை இந்த உள்ளூராட்சி மன்றத்தின்மூலம் தீர்வுகண்டுகொள்ள நாம் என்றும் வழிகாட்டியாக இருப்போம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வத...
தமிழ் மக்களுக்கு நீதி இல்லையாம், தமிழ் கட்சிகளுக்கும் தமது பிழைப்பிற்கும் இலங்கையில் நீதி உண்டாம் -...
பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் - பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்...

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் - பூநகரிப் பிரதேச மக்களுடனா...