வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமது வாழ்விடங்களில் தாம் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - சரவணை மக்கள் புக...
நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் ...
|
|