வன்னியின் பிரதிநிதிகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தியதே வரலாறு : மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020

வன்னி மக்களினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது வாழ்வை வளப்படுத்தினார்களே தவிர மக்களின் வாழ்வு வளப்படுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீணைச் சினானத்தின் ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இன்று மல்லாவியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வீணைச் சின்னத்திற்கு வாக்ளித்து தனனுடைய கரங்கள் பலப்படுத்தப்படுமானால் வன்னி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தருவதுடன் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இல்லாத ஊருக்கு வழிகாடட தான் தயாராக இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சமஸ்டி, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை பெற்றுத் தரமுடியும் என்று உங்களை ஏமாற்றுவதற்கு தான் தயாராக இல்லை எனத் தெரிவித்ததுடன்  ஆயுதப் போராட்டத்தின் பயனாக கிடைத்த மாகாண சபையை சரியாக செயற்படுத்துவதன் ஊடாக எமது அரசியல் அபிலாசைகளை நோக்கி நகர முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த காலங்களில் மக்களை உசுப்பேற்றி நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொண்ட வன்னி மாவட்ட உறப்பினர்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பதிலாக தங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Related posts:

பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் - வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ச...
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...

நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!
எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது – நாடாளுமன்றில் அமைச...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று கள...