வடமராட்சி – தென்மராட்சி பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் விஷேட சந்திப்பு!

உள்ளூராட்சி சபைகளை யார் முன்னெடுத்து நடத்த முன்வருகின்றார்களோ அவர்கள் மக்கள் நலன்களை முன்னிறுத்தி சபையை செயற்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநயகக் கட்சி தயாராக இருக்கின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்களுடன் அமையவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் முன்னகர்வுகள் தொடர்பாக கட்சியின் தொலைபேசியூடாக நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் பிரதிநிதியாக உள்ளூராட்சி மன்றுக்கு செல்லும் ஒவ்வொரு பிரதிநிதியும் மக்களுக்கான சேவைகளை செய்வதில் முன்மாதிரியானவர்களாகவும் இதர தரப்பினருக்கு எடுத்துக்காட்டானவர்களாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உடனிருந்தார்.
Related posts:
தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விட...
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பில் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத...
|
|