யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, February 14th, 2017

யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை தீவிர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது குறித்து எமது விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தற்போது நாடாளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடத்தில் இதுவரையில் 512 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

கடந்த வருடத்தைப் பொறுத்த வரையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் – அதாவது, 33 நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் அது ஆரம்ப ஒரு மாதத்திலேயே பல மடங்கு அதிகரித்திருப்பது மிகுந்த ஆபத்தான சூழ்நிலையையே குறித்துக் காட்டுகிறது.

நபட்டில் உள்ளூராட்சி சபைகள் மக்கள் பிரதிநிதிகளற்ற நிலையில் செயற்படுகின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்ற சூழலில், மேற்படி டெங்கு போன்ற நோய்கள் பரவுவiதைத் தடுக்கும் நடவடிக்கைகளில், எமது மக்களின் நலன் கருதி, அதிகாரிகள், அக்கறை எடுத்து தீவிர செயற்பாடுகளையும், விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் பொது அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள், காவல் துறையினர், சுகாதார பரிசோதகர்கள், புத்தி ஜீவிகள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற ஏற்பாடுகளை மேற்கொண்டு குடாநாட்டில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவுகின்ற அபாய நிலையை தடுக்க முன்வர வேண்டும்.

இது குறித்து வடக்கு மாகாண சபை நிர்வாகம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். எனினும், அது சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியான நிலையில், எமது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வு பெற்று செயற்பட முன்வரவேண்டும் என்பதுடன், டெங்கு நோயைக் பட்டுப்படுத்தக்கூடிய சுய ஏற்பாடுகளையும் சமூக நலன் கருதி மேற்கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

IMG_0608

Related posts:

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா ...
புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக...