முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகிறது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம்.!

Friday, August 14th, 2020

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம் வட பகுதியில் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கமைய  பெருந்தொகையான கொடுவா மீன் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.

இரணைதீவு, கௌதாரிமுனை, மூன்றாம்பிட்டி, இலுப்பைக் கடவை, விடத்தல் தீவு, நாயாறு உட்பட வடக்கின் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு நீர் நிலையகளில் நேற்று(13.08.2020) நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நாடளாவிய ரீதியில் காணப்படும் நன்னீர் மற்றும் பருவ கால நீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீர் நிலைகளில் இறால் மற்றும் மீன் குஞ்சுகள் இடப்பட்டு அவை பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தன.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் நேற்று தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், வடக்கின் பல்வேறு நீர் நிலைகளிலும் கொடுவா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !