முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016

நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிறார்களைக் கல்வியின்பால் ஈர்க்கின்ற அதிமுக்கியத்துவம்வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்த முன்பள்ளி ஆசிரியைகள் பலர் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கெனப் போதுமானவளவு ஓர் ஊதியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுவது அவசியமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாகாண சபையின் நிர்வாகமற்ற சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தே...
யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்ச...