மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி – இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துராயாடல்!

Monday, March 14th, 2022

மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கிப் பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சூரியக் கலம் மற்றும் காற்றினைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக்கூடிய கலப்பு பொறிமுறையினை மீன்பிடிப் படகுகளில் பொருத்துவன் மூலம் எரிபொருள் செலவீனத்தினை  கட்டுப்படுத்தி பெருமளவு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்,  சூழல் மாசடைதல் சுற்றுச் சூழல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே, இதுதொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி கடற்றொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

இதனிடையே

நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை ஊடான அபிவிருத்தியை விரைவுபடுத்தும் வகையில்,  குறித்த செயற்பாடுகளில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று தனியார் முதலீட்டாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை

கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத் திறன் காரணமாக பாரிய பின்னடைவைச் சந்தித்துத்துள்ள வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிறப்பாக செயற்படுத்துவதற்கு பகீரதபிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று வடகடல் நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா அவர்களும் கலந்து கொண்டார்

Related posts: