மாணவர்களே!… அறிவாயுதம் ஏந்தி வாருங்கள் – டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!!

Friday, September 9th, 2016

மாணவர்களே!… வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள். நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. அப்போதுதான் கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள் எதிர்கால எண்ணங்களும் ஈடேறுவதுடன் எமது மக்களின் கனவுகளும் விரைவில் நிறைவேறும் என – ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களை நோக்கி அறைகூவல் விடுத்துள்ளார்.

இன்றையதினம்(9) யாழ்.மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தொடர்ந்த உரையாற்றுகையில் –

யாழ்.மத்தியகல்லூரி பாடசாலை சமூகம் என்னிடம் கேட்டுக்கொண்ட கோரிக்கைக்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்ளிடம் நான் இவ்விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் மிகுந்த சந்தோசத்துடன் எனது அழைப்பை ஏற்று இன்று இங்கு வருகைதந்து எமது பாடசாலையின் 200 ஆவது அண்டு நிறைவுதின விழாவை சிறப்பித்துள்ளார். அதற்காக நான் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

3

மேலும் யாழ் மத்திய கல்லூரிக்கும் எனக்கும் இடையிலான உறவு செம்மண்ணுக்கும் தண்ணீருக்கும் இடையிலான உறவைப்போன்றது. இந்த பாடசாலையில் தான் நானும் படித்திருக்கிறேன். எனது சகோதரர்களும் படித்திருக்கிறார்கள். எனது தாயார் திருமதி கதிர்வேல் மகேஸ்வரி அவர்கள் இங்கேதான் ஆசிரியையாகவும் பணிபுரிந்திருக்கிறார்.

அது மட்டுமன்றி, பல்வேறு புத்திஜீவிகளையும், சிறந்த கல்விமான்களையும்,.. ஆன்மீக தலைவர்களையும், சமூக பெரியார்களையும்,.. சமூக அக்கறையாளர்களையும்,. கவிஞர்களை. இலக்கியப்படைப்பாளிகளை இந்த பாடசாலை உருவாக்கி தந்திருக்கிறது.

எல்லைகள் தாண்டி இடறி வீழ்ந்தாலும் எங்கள் வேர்களின் இருப்பிடம் இதுவல்லவா!…. என்று எம் தேசத்துக்கவிஞன் ஒருவன் பாடினான்.

அதுபோல், இந்த பாடசாலை உருவாக்கிய கல்விமான்கள் பலரும் இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்தாலும். தம்மை உருவாக்கிவிட்ட இந்த கல்லூரியே தங்கள் அடிவேர் என்று நன்றி பாராட்டுகிறார்கள். அந்நியர்களின் காலனியாதிக்க காலத்தில் கருவாகி உருவாக்கி வளர்ந்து வந்த இந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு உரமாக நின்று உழைத்தவர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

02

இருநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த கால்லூரி பல சத்திய சோதனைகளுக்கு மத்தியில்தான் சரித்திர சாதானைகை படைத்து வந்திருக்கிறது. இன்று சிறந்த ஒரு அதிபராக திரு எழில்வேந்தன் அவர்கள் இருப்பது போல் எத்தனையோ அதிபர்கள் இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். பலநூறு ஆசிரியர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் நான் நினைத்துப்பார்க்கிறேன்.

குறிப்பாக முன்னாள் அதிபர்களில் ஒருவரான இராசதுரை அதிபர் அவர்களை இந்த இடத்தில் பெரிதும் நினைத்துப்பார்க்கிறேன். கடும் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பாடசாலையை கட்டி எழுப்பவதற்காக தகுதியான ஒரு அதிபரை நான் அந்தக்காலகட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போதுதான் அதிபர் இராசதுரையுடனான தொடர்பு எனக்கு கிடைத்தது. கடுமையான எதிர்ப்புகள் தடைகளுக்கு மத்தியில் அவரை நான் இந்த பாடசாலைக்கு அதிபராக நியமித்திருந்தேன்.

ஒத்துழைப்பின்மையும் உயிர் அச்சுறுத்தல்களும் தனக்கு இருப்பதை அறிந்துகொண்டும் அவர் இந்த பாடசாலையில் எனது முழுமையான ஒத்துழைப்புடன் அதிபராக கடமையாற்றியிருந்தார். அவரது முழுமையான அற்றலினூடாகவே இந்த பாடசாலை மீண்டும் பெருவிருட்சமாக பரந்து விரிந்து இன்று 200ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது.

ஆனால் எமது கல்விச்சமூகத்தினரது துரதிஸ்டவசம் பாதியில் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இவரது இழப்பு எமது பாடசாலைக்கு மட்டுமல்ல எமது இனத்திற்கும் பேரிழப்பாகும். இவ்வாறு இந்த பாடசாலைக்காக அளப்பரிய சேவைகள் செய்த பெருந்தகைகளை எமது கல்விச்சமூகத்தின் சார்பாகவும், மாணவர்களின் சார்பாகவும், பெற்றோர்களின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் இவர்கள் எல்லோருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

01

கல்வியே எமது மக்களின் மூலதனம். கல்வியே எமது தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சு! இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு வரும் எமது மக்களுக்கு கல்வியே ஒளி வீச்சு… இந்த விழாவிற்கு எமது ஜானாதிபதி மேதகு மைத்திரி பால சிறிசேன அவர்கள் வந்திருப்பது எமக்கு கிடைத்த வரம் என்றே நாம் கருத வேண்டும்.

போர்க்கால சிதைவுகளில் இருந்து எமது தேசத்தை மீட்டெடுக்க நாம் உழைத்த போது…. எமது கல்விச்சமூகத்தின் அபிவிருத்திக்காக நாம் ஆற்றிய அரும்பணிகளின் போது,.. குறிப்பாக யாழ் மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு நாம் தோள் கொடுத்து நின்ற போது,… அவைகளில் பாரிய பங்களிப்பை ஆற்றியிருந்தவர் இன்றைய எமது ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா அவர்கள்.

கடந்த காலங்களில் எமது மக்களின் நிலங்களை நாங்கள் மீட்டுத்தந்த போது,. சிறைக்கைதிகளை நாம் விடுவித்து தந்த போது, போக்குவரத்து பாதைகளை நாம் செப்பனிட்டு தந்த போது, புகையிர பாதைகளை அமைத்து தந்த போது, கிளிநொச்சி அறிவியல் நகரை பொறியியல் பீடமாக நாம் மாற்றித்தந்த போது.வீடமைப்பு திட்டங்களை நாம் வழங்கிய போது,வாழ்வாதார திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிய போது, எமது வாழ்விடங்களின் உட்கட்டுமான பணிகளை நாம் முன்னெடுத்த போது, எமது பகுதியின் விவசாயத்தை அபிவிருத்தி செய்தபொது,, மருத்துவம் துறையையும் வைதத்தியசாலைகளையும் மேம்படுத்தியபோது ,கடல் உற்பத்திகளை அபிவிருத்தி செய்தபோது, கல்விச் சேவைகளை முன்னெடுத்தபோது, நீதித்துறைகளையும் சிவில் பாதுகாப்புகளையும் வலுப்பெற்றுக்கொடுத்தபோது, பனைவளம் உள்ளிட்ட இன்னோரன்ன அபிவிருத்திகளை மேற்கொண்டபோது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்து இவைகளுக்கு எல்லாம் அங்கீகாரம் வழங்கி, எம்மை ஊக்குவித்து, எமக்கு உறுதி கொடுத்தவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறீ சேனா அவர்கள்

தமிழ் பேசும் மக்களின் மன விருப்பங்களையும் அவர்கள் தாங்கி நின்ற மன வலிகளையும் உணர்ந்து கொண்டவராக ஜனாதிபதி அவர்கள் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவார் என்பது எமது மக்களின் நம்பிக்கை. ஆழப்பெருங்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எமது மக்களை கரையேற்றிய கப்பலாக நாம் உங்களுக்கு பெரும்பணியாற்றியிருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த கப்பலை பயன்படுத்தி கரையேற வேண்டியது தமிழ் மக்களாகிய உங்களது ஆற்றலில் தான் தங்கியிருக்கிறது. இதில் மாணவர்களாகிய உங்களுக்கும் பங்குண்டு.

மாணவர்களே! வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள்! நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. நாளைய எமது தேசத்தின் ஆளுமைகள் நீங்கள். எமது தேசத்தை செதுக்கி வைக்கும் சித்தனை சிற்பிகள் நீங்கள். அறிவாயுதங்களை மட்டும் ஏந்தி வாருங்கள். உங்களது அறிவும் ஆற்றலும் சிந்தனைகளும் எமக்கிருந்தால் அதுவே உறுதிமிக்கவை, சரியான பாதையை செப்பனிட வாருங்கள். மதி நுட்ப சிந்தனையின் வழி எதுவென்று எமது மக்களுக்கு வழி காட்ட நீங்களும் வரவேண்டும். கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள் எதிர்கால எண்ணங்களும் ஈடேறும். எமது மக்களின் கனவுகளும் விரைவில் நிறைவேறும் – என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

Related posts: