மணிவண்ணனுக்கான ஆதரவு குறித்து அமைச்சர் டக்ளஸ் கருத்து! (வீடியோ இணைப்பு)

Wednesday, December 30th, 2020

யாழ் மாநகரசபைக்கான முதல்வரையும் நல்லூர் பிரதேசசபைக்கான தவிசாளர் தெரிவும் இன்றையதினம் நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் . விஸ்வலிங்கம் மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல நல்லூரிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினதும் ஏனைய சில கட்சிகளினதும் ஆதரவுடன் மணிவண்ணன் ஆதரவு தரப்பினர் வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினள் ஆழுகைக்குள் இருந்த இவ்விரு சபைகளும்  அச்சபைகளின் முதல்வரதும் தவிசாளரதும் தன்னிச்சையான போக்குகளாலும் சுயநலன்களாலும் மக்கள் நலன்சார் விடயங்கள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டது.  இதனால் அவர்கள் மீத நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டு இருவரும் முன்வைத்த வரவுசெலவு திட்டம் இருதடவைகள் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவோடு இவ்விருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/epdpnewsSL/videos/852955902171414

Related posts: