மக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 21st, 2016

வடக்கின் மாகாணசபை அதிகாரத்தை தம்மகத்தே கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆற்றலற்றவர்களாகவும் தமிழ் மக்கள் மீட்சிபெறவேண்டும் என்ற விருப்பிமை கொண்டவர்களாகவும் இருப்பதனால் தான் எமது மக்கள் இன்றும் வாழ்வியலை தொலைத்தவர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் ஜெயசீலன் தலைமையில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

1

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவுசெய்யப்பட்ட 14 திட்டங்களை உள்ளடக்கிய உபகரணங்களை கழகங்கங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கிவைத்தபின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

சாணக்கியமான முறையில் நடைமுறை சார்ந்த திட்டங்களை நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்தமையால்தான் எமது மக்கள் தமது தேவைகளை அதிகளவில் கடந்த காலத்தில் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது.

5

தற்போது மாகாணத்தினது அதிகாரத்தையும் மத்தியுடனான உறவையும் அதிகளவு கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கான எந்தவொரு தேவைகளையும் இன்றுவரை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வில்லை .

அத்துடன் அவர்கள் செய்யமுடியாத விடயங்களையும்  அல்லது அவர்கள் செய்ய விரும்பாத விடயங்களையும் முன்னிறுத்தியே அரசியல் செய்கின்றனர். ஆனால் நாம் எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களைக்கொண்டு தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து தேவைகளையும் சீரான முறையில் தொடர்ச்சியாக பெற்றுக்கொடுத்து வந்துள்ளதுடன் அவர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்த வந்துள்ளோம். இதுதான் நாம் செய்துவரும் சாணக்கியம் மிக்க அரசியல் செயல்பாடாகும்.

3

வடக்கின் மாகாணசபை அதிகாரத்தை தம்மகத்தே கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆற்றலற்றவர்களாகவும் தமிழ் மக்கள் மீட்சிபெறவேண்டும் என்ற விருப்பிமை கொண்டவர்களாகவும் இருப்பதனால் தான் எமது மக்கள் இன்றும் வாழ்வியலை தொலைத்தவர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் நாம் மக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்ற சுயநலமற்ற எண்ணத்துடனே  நாம் தமிழ் மக்களுக்காக பணியாற்றிவருகின்றோம். அத்துடன் ஜதார்த்தமான மக்கள் நலன்சார்ந்த சேவைகளே எமது செயற்பாடுகளாகவும் இருந்தவருகின்றது.

2

நாம் செய்துவரும் மக்கள் பணிகள் மேலும் வலுச்சேர்க்க உங்களது ஆதரவு எங்களிடம் கைகோர்க்கமானால் நிச்சயமாக எமது மக்களின் அனைத்து தேவகைளுடன் உரிமைசார் பிரச்சினையையும் வெற்றிகொண்டு ஒரு ஒளிமயமான வாழ்வியலை உருவாக்கித்தர உறுதியுடன் நாம் உழைக்க தயாராக உள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவி திருமதி இ.கைலாஜினி, பருத்தித்துறை நகரசபை மன்னள் எதிர்க்கட்சி உறுப்பினர் மார்க்கு மனுவேல், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன், பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார்  பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசுந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் குறித்த பிரதேசத்தினது அரச உத்தியோகத்தர்களும் விளையாட்ட கழகங்களைச்சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்தகொண்டனர்.

4

Related posts:

கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...
ஜனாதிபதி தலைமையில் குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும்; முன்னேற்றம்காணும் - அமைச்சர் டக்ளஸ்...

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்...