புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் தேவானந்தா!

Friday, January 1st, 2021

புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(01.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்; திருமதி. இந்து ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர்> தேசியக் கொடி மற்றும் மங்கள விளக்கு ஆகியவற்றை ஏற்றி; சம்பிரதாயபூர்வமாக புதிய ஆண்டிற்கான அமைச்சின் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட்ட பெரும்பாலான பணியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில்> அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
இடமாற்றம் பெற்றுத் தாருங்கள்: முலைத்தீவில் பணிபுரியும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தே...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!