பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Friday, April 19th, 2024

பளை கரந்தாய் பகுதியில்  LRC காணிகளில் வசிக்கும் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-   கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கரந்தாய்  பிரதேசத்தில்  காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வசிக்கின்ற மக்கள் தமக்கு வதிவிட விடயத்தில் தொடர்ந்தும் lrc நினுவனத்தால் பலதரப்பட்ட கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அவற்றிக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தனர் . 

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் உரிய தரப்பினரோடு கலந்துரையாடி இரண்டு வாரத்தில் சுமுகமான தீர்வினை பெற்றுத்தரப்படும் என தெரிவித்தார்.

இநநிலையில்

சமகால அரியல் சூழல் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்தி எமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முழுமையான அர்ப்பணிப்போடு பாடுபடவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா வலியுறுத்தியுள்ளார். 

கிளிநொச்சியில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் குறித்த .மாவட்டத்தின்  பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts:

மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே திருமலைக்கான விஜயத்தின் நோக்கம் – டக்ளஸ் ...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...