பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!

Monday, April 4th, 2022

பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், பலநாள் மீன்பிடிக் கலன்களில் மூலம் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும், நாட்டில் நிலவி வருகின்ற அண்மைய எரிபொருள் தட்டுப்பாடு, கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நோர்த் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளை விஸ்தரித்து, அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கரிடம் ஒத்துழைப்புக்களை கோரியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று வடகடல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இந்தியாவின் ஒத்துழைப்புக்களை நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றுவதற்கான வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: