நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, December 6th, 2017

சுமார் ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நெடுந்தீவில், ஒரு நாள் படகுகள் சிறிய படகுகள் தெப்பங்கள் என 600க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் உள்ளன. இந்த மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக கரை சேருவதற்கும் நங்கூரமிடும் தளமோ அல்லது ஏனைய பாதுகாப்பான வசதிகளோ இல்லாதுள்ளது.

இதன் காரணமாக காற்று பலவாக வீசுகின்ற காலங்களில் இத்தொழிலாளர்களது படகுகள் அறுத்துக் கொண்டு பாறைகளுடன் மோதுண்டு சேதமாகி விடுகின்றன. எனவே நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசதியானதொரு நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட ...
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் க...
தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை...

மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...
படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்கா...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...