நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, February 17th, 2021

கடற்றொழில் அமைச்சின் அங்கமான நாரா எனப்படும் தேசிய நீர்யில் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்திய கடற்றொழில் அமைச்சர், குறித்த நிறுவனத்தினர் எதிர்கொள்ளும் நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

மேலும், கடற்றொழில் அமைச்சர் அண்மையில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முதலாவது கட்டப் பணிகளுக்கான ஆய்வுப்பணிகளை சிறப்பாக மேற்கொணடு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நாரா அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான வினைத்திறனான செயற்பாடுகளின் ஊடாகவே நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதுடன் கடற்றொழில் சார் மக்களின் வாழ்கைத் தரத்தினையும் உயர்த்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத...