நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – யாழில் ஊடகவியலாளர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 16th, 2018

உதயன் பத்திரிகைக்கு எதிராக நான் தொடுத்திருந்த மானநஷ்ட வழக்கில் நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உதயன் பத்திரிகை நிறுவனத்தக்கு எதிராக 500 மில்லியன் ரூபா கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்த நிலையில் நீதிமன்றம் 2 மில்லியன் ரூபாவை மானநஷ்ட நிதியாக எனக்கு வழங்குமாறு உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பணத்தை பெற்றுக் கொள்வது எனது நோக்கம் இல்லாதுவிடினும் நான் இவ்வழக்கில் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து சுற்றவாழிதான் என்றும் நாம் மக்களிடம் கூறிவருவதே உண்மையான நிலைப்பாடு என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

நாம் ஒருபோதும் போலித்தனமான பொய்த்தனமான அரசியலை முன்னெடுத்தவர்களும் இல்லை முன்னெடுப்பவர்களும் இல்லை. கடந்தகாலங்களில் என் மீதும் எனது கட்சி மீதும் சக தமிழ் கட்சிகளும் தமிழ் ஊடகங்களும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்திவந்தன.

இது ஒருவகையில் அரசியல் காழ்ப்பணர்ச்சியாகவே இருந்துள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தலைமைகளின் தவறான வழிநடத்தல்கள் தான் எமது மக்களது இன்றைய துன்ப துயரங்களுக்கு அடிப்படையான காரணம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

35415467_1802836059755473_2375373109487206400_n

Related posts:

நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
பேலியகொட மீன் சந்தை - இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் - மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அ...
இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத...

பிரதேசவாத பிரிவினைகளை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – மட்டு. மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் த...
அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் - ட...
மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...