நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த வலியுறுத்து!.

Thursday, January 26th, 2017

நாட்டில் சுமார் 8.5 மில்லியன் வீதமான உழைப்பாளர்களில் சுமார் 1.5 மில்லியன் உழைப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் உட்பட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிப் பணத்திலிருந்தே செலுத்த வேண்டியுள்ளது. எனினும், இவர்களால் நாட்டுக்கு கிடைக்கின்ற பொருளாதார பங்களிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் , சேர் பெறுமதி வரி, உற்பத்திகள் வரி மற்றும் காணி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டினது பொருளாதார நிலை தொடர்பில் பல்வேறு கேள்விக்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும். அதற்கென ஒழுங்கானதும், நிலையானதும், நீடித்ததுமான நிதி முகாமைத்துவக் கொள்கையும், அதே வகையிலான தேசிய பொருளதாரக் கொள்கையும் வகுக்கப்பட்டு, உரிய முறையில் அது செயற்படுத்தப்பட வேண்டும் .

நாட்டை முன்னேற்றுவதற்கு நாட்டின் பிரஜைகளுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில், அவர்களது உற்பத்திகளைப் பெருக்குவதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது உற்பத்திகளைப் பாதிக்கின்ற காரணிகள் மற்றும் வரிகள் அகற்றப்பட வேண்டும் .,

தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மேற்கொள்ளத்தக்க வகையில் எமது நாட்டின் முதலீட்டுத் தளங்களின் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், நட்டின் அனைத்து நபர்களுக்கும் என பொதுவானதும் – சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும் .

உதாரணமாக, எஸ்ரோனியா நாட்டில் தனியார் வருமான வரி 22 வீதமாகவும், வர்த்தக வருமான வரி 22 வீதமாகவும் அறவிடப்படுகின்றது. இதன்படி, ஊதியம் பெறுகின்ற அனைவரும் தனியார் வருமான வரியையும், வர்த்தகங்களில் ஈடுபடுகின்றவர்கள் அனைவரும் வர்த்தக வருமான வரியையும் செலுத்துகின்றனர். என்பதையும் இங்கு சுட்டிக்காட்டி, விடைபெறுகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-2 copy

Related posts: