தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் மத்தியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Sunday, December 30th, 2018ஊழியர்களின் நலன்கருதி உருவாக்கப்படுகின்ற தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஊழியர்கள் தாம் தொழில் செய்யும் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கி தத்தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுகொள்கின்றனர்.
அத்தகைய ஒன்றிணைந்த செயற்பாடுகளை சிலர் தமது சுயநலன்களுக்காக குழப்பங்களை ஏற்படுத்தவோ அன்றி பயன்படுத்துவதையோ எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு தவறாக செயற்படும் ஊழியர் சங்கங்கள் தேவையற்றதொன்றாகவே எண்ணமுடிகின்றது.
அந்தவகையில் ஊழியர்களின் நலன்களை முன்நிறுத்தியதாக உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் அந்த ஒன்றியங்கள் இயங்கவேண்டும் என்பதே இன்றைய தேவைப்பாடாகும்.
இந்நிலையில் தொழில் சார் ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தியதாக இந்த ஜனநாயக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் திறம்பட அமைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|