திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சல்லி அம்மன் கோயில் இறங்கு துறையை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 750 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் குறித்த இறங்குதுறை சீராக தூர்வாரி புனரமைக்காமையினால் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஒத்துழைப்புக்களின் மூலம் முதற் கட்டமான வேலைகள் இன்று(10.01.2021) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே திருகோணமலை, சல்லி கலைமகள் மீன்பிடி இறங்குதுறை பிரதேசத்தை நேரடியாக பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இறங்கு துறை பிரதேசத்தின் கடலரிப்பை கட்டுப்படுத்துவது மற்றும் இறங்கு துறையை ஆழப்படுத்துவது போன்ற பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|