திருமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பியின் புதிய உறுப்பினர் நியமனம்

Wednesday, November 7th, 2018

 

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினராக சண்முகம் பாலகணேசன் இன்று நியமனம் செய்துவைக்கப்பட்டார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலில் திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் அக்கடமையிலிருந்து விலகிக்கொண்ட நிலையில் அச்சபையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு கட்சியின் சார்பில் இன்னொருவரை நியமிக்க வேண்டியிருந்தது.

அதற்கமைவாக கட்சியின் நீண்டகால உறுப்பினரும், திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளருமான சண்முகம் பாலகணேசன் (தோழர் பால்ராஜ்) அவர்களை புதிய உறுப்பினராக கட்சியின் செயலாளர் நாயகமும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (07.11.2018) நியமனம் செய்துவைத்தார்.

தனது நியமனத்தைப் பெற்றுக்கொண்ட சண்முகம் பாலகணேசன் அவர்கள், செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமானத்தையும் செய்து கொண்டதுடன், கட்சி வழங்கியிருக்கும் இந்த பதவியை சமூக அக்கறையுடனும், கட்சியின் கௌரவத்தைப் பாதுகாக்கும் விதமாகவும் பிரயோகிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக திருகோணமலை பட்டனமும், சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கான உதவிகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும், மேலதிகமான உதவிகள் தொடர்பில் தனது கவனத்திற்கு தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கைகளை பெற்றுத்தர ஆவணசெய்வதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்

balraj3

balraj2

balraj1

Related posts:


பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுரு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்...
வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை –...