திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, October 22nd, 2019

பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு செயலாளர் நாயகம் விஜயம் மேற்கொண்டார்.இதன்போது ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் வளைவு அமைப்பதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

அதுமட்டுமல்லாது அந்த நுழைவாயில் வளைவு அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருந்தும் திட்டமிட்ட ஒருசிலர் வழக்கு தாக்கல் செய்து ஆலயத்தின் புனிததையும் அதன் மகிமையையிம் மளுங்கடிக்க முயற்சி செய்கின்றனர்.

இதனால் எமது ஆலயத்தின் பாரம்பரியங்கள் அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

அதுமடுமல்லாது இப்பகுதி தமிழ் அரசியல் நாடளுமன்ற உறுப்பினர்களும் இது விடையத்தில் அக்கறை காட்டவில்லை.
எனவே இந்த ஆபத்திலிருந்து எமது வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தை பாதுகாத்து அதன் பாரம்பரியங்களுடன் ஆலய சூழலை புனரமைப்பதற்கு வழிவகை செய்து தறுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தன்ர்.
ஆலய நிர்வாகத்தினரது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

'எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ...
முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூ...

சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் வ...
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...