தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, July 26th, 2019

மொழி உரிமை பற்றி வாயளவில் பேசிக் கொண்டே ‘கம்பெரலிய”வில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பணம் பெட்டி கிடைக்கும் என்றால் அவர்களுக்கு மொழியுரிமை ஒரு பொருட்டல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த ஆட்சிக் காலங்களில் நெல்சிப் என்கின்ற திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்@ராட்சி மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நெல்சிப் திட்டத்தில் கூட இதே தமிழ்த் தரப்பினர் அவர்களது நிர்வாகத்தின் கீழிருந்த உள்@ராட்சி சபைகளிலே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிருந்த வரலாறும் உண்டு என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

‘திவிநெகும’ – வாழ்வின் எழுச்சித் திட்டமானது ஒரு சட்ட ஏற்பாடாக வர இருந்தபோது, அதன் ஊடாக மாகாண சபைகளின், உள்@ராட்சி சபைகளின் மூலமான சில அபிவிருத்தித் திட்டங்கள் பறிபோய்விடும் என அதனை நிராகரித்தோர், இன்று மத்திய அரசின் வேலைத் திட்டத்தை ‘கம்பெரலிய’ என தங்களது நிறைவேற்றுச் செயற்பாடாக பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிகாரப் பகிர்வு பற்றியும் கதைக்கின்றனர்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலமொன்று கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஒரு குழு நாடாளுமன்றத்தில் நியமனம் பெற்றது. அந்தக் குழுவின் அறிக்கையானது ஒரு வருடம் ஆகின்ற நிலையிலும் இதுவரையில் இல்லாத காரணத்தால், மாகாண சபைகளுக்கான தேர்தலில் இழுபறி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைக்கின்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வெறுமனே ஊடகங்களுக்காகக் கதைக்காமல், இந்த அறிக்கையை விரைவுபடுத்தி, தற்போது இருக்கின்ற அதிகாரப் பகிர்வு தொடர்பில் அக்கறை எடுத்திருக்கலாம். அதுவும் இல்லை.

Related posts:

வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் - வவுனியாவில் டக்ளஸ் தேவானந்...
கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டத்தில் செயலாளர் நாயக...
வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இடைநிறுத்தம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் த...
வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
.ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின வாகனப் பேரணிகள் யாழ் மற்றும் சாவகச்சேரியிலிருந்து பேரெழுச்சியுடன் பருத...