தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் வடக்கு பகுதிக்கு மக்கள்!

Monday, January 15th, 2018

யுத்தத்தால் அழிவடைந்த கோயில்களைப் புனரமைப்பதில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வரலாற்றில் தடம்பதித்துள்ளது என வலிகாமம் வடக்கு பகுதிக்கு  மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு பகுதிக்கு நேற்றையதினம் சென்ற டக்ளஸ் தேவானந்தா அந்தப் பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவகள் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு கிழக்கில் உள்ள இந்து கிறிஸ்தவ ஆலயங்களை நிர்மாணிப்பதில் அதிக அக்கறையுடன் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டுள்ளார். இந்து கலாசார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் அழிவடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைப்பதிலும் பதிவுசெய்யப்படாத வணக்கஸ்தலங்களை பதிவு செய்வதிலும் அவற்றை நிர்மாணிப்பதற்குமாக குறித்த அமைச்சினூடாக இலட்சக்கணக்கான நிதிகளை வழங்கியிருந்தார்.  அந்தவகையில் அவரது பணிகள் ஆன்மீகம் சார்ந்தது மட்டுமல்லாது சமூகம் சார்ந்தும் இருந்தது.

குறிப்பாக தமிழ் மொழியை பாதுகாப்பதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றிவருகின்றார். கடந்தகாலங்களில் வடக்கு மாகாணம் கல்வித்துறையில் ஒரு முதன்மை இடமாக இருந்தபொழுதிலும் தற்போது அது பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதற்குக் காரணம் சரியான தலைமைத்துவம் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளிடம் ஆட்சி அதிகாரங்கள் இருப்பதையே நாம் காணமுடிகின்றது.

எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தாம் விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இம்முறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வலுப்படுத்தி அதனூடாக எமது சமூகத்தை வளப்படுத்த எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது  கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா வலிகாமம் வடக்கு மக்களின் நீண்டநாள் துயரங்களையும் அவர்களது கனவுகளையும் நாம் நன்கறிவேன்.

எமது கட்சியைப்பொறுத்தமட்டில் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதில் தான் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

அந்தவகையில் அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு அவர்கள் ஒரு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே எமது விருப்பாகும். அதற்கு வரவுள்ள சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு சாதகமாக தருவார்கள் என நம்புகின்றோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: