ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் சாவற்கட்டு பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Thursday, December 22nd, 2016

அகல வலை கடற்றொழிலை மேற்கொண்டுவரும் தமது பகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதார தொழில் நிரந்தரமாக தடைசெய்ப்படுமானால் தாம் கடும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவோம் எனவும் தமது ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு ஏதுவாக உள்ள தடைகளை நீக்கி மீண்டும் தொழிலை மேற்கொள்வதற்கு நடவடிக்கைமேற்கொண்டு தருமாறும் ஆனைக்கோட்டை சாவற்கட்டு பகுதி கடற்றொழிலாளர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுதுள்ளனர்.

இன்றையதினம் ஆனைக்கோட்டை சாவற்காட்டு பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டபோதே குறித்த பகுதி கடற்றொழிலாளர் அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1

இதுதொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –

1970 ஆம் ஆண்டு காலத்திலிருந்து குறித்த தொழிலை தமது பகுதி தொழிலாளர்கள் காலாகாலமாக மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தான் இந்த தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் வடபகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் தமது தொழிலை தடை செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கியதாகவும் இதனால் தமது கடற்கலன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

3

அத்துடன் தாம் செய்யும் தொழில் சட்டரீதியில் தடைசெய்யப்பட்ட ஒன்று அல்ல எனவும் ஆனால் சில பகுதி கடற்றொழில் அமைப்புகளின்  அழுத்தங்களால்தான் இந்த நிலைப்பாட்டை துறைசார் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் எனவும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மேலும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தாம் தொழில் செய்யும் இறங்குதுறைப்பகுதியான காக்கைதீவு பகுதி விஸ்தீரணப்படுத்தப்படவேண்டும் எனவும் தற்போது அங்கு 300க்கும் மேற்பட்ட படகுகள் தொழிலில் ஈடுபடுவதால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

4

குறித்த பகுதி தொழிலாளர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு  உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலார் வெலிச்சொர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா மற்றும் கட்சியின் வலி தென்மேற்கு பிரதேசத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் குறித்த பிரதேச கடற்றொழிலாளர்கள் என  பலர் கலந்துகொண்டனர்.

2

Related posts:

வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்: கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தே...
விவசாய ஊக்குவிப்புத் திட்டமம் - யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வை...