ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, June 17th, 2018

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் குறித்த அலுவலகம் இன்றையதினம் (17) சம்பிரதாயபூர்வமாக திறந்தவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனாதிபதி விஷேட அமைப்பாளருமான  பிரபாகணேசன், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் - டக...
வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...