“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊடகங்களில் வெளியாகிய செய்தியைக் கண்டிக்கின்றோம்.

Thursday, September 27th, 2018

தென் இந்தியாவின் “சுப்பர் சிங்கர்” பிரபலங்களை இலங்கைக்கு அழைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இலங்கையில் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அந்தக் கலைஞர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்குவதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறு செய்திருப்பதாகவும், அந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கு எமது கட்சியின் பெயரையும், எமது செயலாளர் நாயகத்தின் பெயரையும் து~;பிரயோகம் செய்து மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட தீசன் அமிர்தலிங்கம் என்பவரே குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும், இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் எமக்கு தெரியவந்ததைத் தொடர்;ந்து குறிப்பிட்ட நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் கூறியிருந்தோம்.
எமது அறிவுறுத்தலுக்கு அமைவாக எமது செயலாளர் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்தியோ, எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தியோ எவருக்கேனும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உடனடியாக சம்பந்மதப்பட்ட நபர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ள நிலையில், உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்தியை வெளியிடுவதானது கண்டிக்கத்தக்கதாகும்.
இதுதொடர்பில் தீசன் அமிர்தலிங்கம் என்பவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில், தனக்கும், இந்தியக் கலைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கின்றது என்பதையும், அந்தப் பிரச்சனையில் ஈபிடிபியின் பெயரையோ, கட்சியின் செயலாளர் நாயகத்தின் பெயரையோ பயன்படுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளதாக எமக்கு அறிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதான செய்தியுடன் எமது செயலாளரின் பெயரை தொடர்புபடுத்தி செய்திகள் பரப்புவதை விடுத்து, அத்தகைய மிரட்டலில் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான ஆதாரத்துடன் தீசன் அமிர்தலிங்கம் என்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும்.

Related posts:

ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...
மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி - இந்தியத் தனியார் முதலீட்டாளர்க...

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா - நாடாளுமன்றில் டக்ளஸ்...