சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, January 19th, 2022

தெஹிவளைப் பிரதேசத்தினை சேர்ந்த சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சுழியோடிச் சென்று ஒரு வகை துப்பாக்கியை பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதாக நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் ஆய்வுகள் வெளிப்படுத்தியமையினால், குறித்த தொழில் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்,  பாரம்பரியமாக தம்மால் மேற்கொள்ளப்பட்ட தொழில் முறை தடை செய்யப்பட்டமையினால் வாழ்விதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், கடல் வளத்தை பாதிக்காத வகையில், வாழ்வாதாரத்தை இழந்திருப்போர் தொழிலில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்குவதாக தெரிவித்தார்

Related posts:

நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவி...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் ...