சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, January 25th, 2024

அமரர் தோழர் சிந்தன் டி சில்வாவின் புகழுடலுக்கு அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தரி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

அமரர் சிந்தன் அவர்களின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக களுபோவில பீரிஸ் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரர் சிந்தன் அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொடியை போர்த்தியும், மலர் மாலை அணிவித்தும் தனது இறுதி மரியாதையை அஞ்சலியாகச் செலுத்தினார்.

இந்நிலையில் அமரர் சிந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது களுபோவிய பீரிஸ் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுடிருந்த நிலையில் மாலை 3 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று கொஹூவளை பொதுமயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக அமரர் தோழர் சிந்தன் டி சில்வா கடந்த 22 ஆம் திகதி நிரந்தர ஓய்வுக்குச் சென்றுறிருந்தார்

ஈழ மக்களின் உரிமைப்போராட்டப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கிய தோழர் சிந்தன் அவர்கள் சிலகாலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி நம்மை விட்டுப் பிரிந்து நிரந்தர ஓய்வுக்குச் சென்றுறிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் - டக்ளஸ் தேவானந்தா!
வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது - கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள...
மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது - ...