சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – சாவகச்சேரி வர்த்தக சங்கம் !

Wednesday, February 7th, 2018

நீங்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே பல்வேறு உதவிகளை வணிகர்களாகிய நாம் பெற்றுக்கொண்டோம் என்பதுடன் இன்று நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு நீங்களே பிரதான காரணம் என்றும் அந்த வகையில் சாவகச்சேரி பகுதி வர்த்தகர்களாகிய நாம் ஒருபோதும் உங்களது சேவையை மறக்க மாட்டோம் என்று சாவகச்சேரி நகர வர்த்தகசங்க தலைவர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வர்த்தக சங்க பிரதிநிதிகளை அவர்களது அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடிய போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வர்த்தகர்களாகிய நாம் இங்கிருந்து இடம்பெயர்ந்து மீளவும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் பெரும் இடர்பாடுகளை சந்தித்தது மட்டுமன்றி அடுத்தநேரம் எமது இருப்புக்கான கேள்வியும் எதிர்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நாம் அமைச்சராக இருந்த உங்களை சந்தித்து எமது கஷ்ட நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தோம். அந்த நேரத்தில் எங்களது நிலவரங்களை அவதானமாக கேட்டது மட்டுமன்றி அதற்கான உடனடி நடவடிக்கையாக ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கியது மட்டுமன்றி எமக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமன்றி இன்றைய எமது வளர்ச்சி நிலைக்கு அன்றே அத்திவாரம் இட்டிருந்தீர்கள்.

அந்தவகையில் அந்தநேரம் நீங்கள் செய்த உதவியை வர்த்தக சமூகத்தினராகிய நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.

குறைந்தளவு அரசியல் பலத்தை கொண்டு நாடாளுமன்றில் அமைச்சராக இருந்த நீங்கள் செய்த பங்களிப்பை போன்று அன்றும் சரி இன்றும் சரி ஏனைய தமிழ்க் கட்சிகளோ தமிழ் அரசியல் பிரதிநிதிகளோ எவருமே செய்யவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே கடந்தகால உங்களது சேவைகளை மறக்காது எமது வர்த்தக சமூகத்தினராகிய நாம் தங்களது கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் பங்காற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


வீணைக்கு ஆணை வழங்கினால் எமக்கு கிடைக்கும் அதிகாரத்திற்கு வானமே எல்லை - டக்ளஸ் தேவானந்தா!
கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பே...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...