சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தாருங்கள் – தேவன்பிட்டி மாதர் அமைப்பினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Saturday, June 19th, 2021

மன்னார், தேவன்பிட்டி கிராமத்தில் சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தருமாறு  பிரதேச மாதர் அமைப்பினால்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு்ள்து.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த பதனிடும் தொழில் தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையான வளங்கயைும் உபகரணங்களையும் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. தேவன்பிட்டி கிராமத்தில் சுமார் 52 பெண் தலைமைத்தவ குடும்பங்கள் வாழ்ந்து   வருகின்ற நிலையில், அவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த மாதர் அமைப்பின் பிரதிநிதிகள், ஏனைய குடும்ப பெண்களும் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த  திட்டம் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தனர்

Related posts: